உனக்கு நீயே ஒளியாய் இரு

பிரபஞ்சப் பூவில்
பிரசவித்த பிஞ்சுப்பூவே..!
நெஞ்சம் நிமிர்த்திப்பார்!
செங்கதிர் மழையின் ஈரத்தில்
உன்னுயிர் நனைத்து உழைத்திரு!
உன் தபோவனக்கூட்டில்
உள்ளொளி பெருக்கித் திளைத்திரு..!-சமத்துவ
வெள்ளொளி பரப்பி முளைத்திரு..!
உனக்கு நீதான் போதிமரம்..!
இனிமேல் ஏது ஜாதிமரம்?-உன்
எதிகாலம் தழைந்துபெறும் கோடிவரம்..!
வல்லரசின் கொத்தளத்தில்
வாழும் இந்தியா-பெண்ணே..!
நீயனுப்பும் ஏவுகணை கண்டு
அண்டமே அதிசயித்து அரும்பி
இந்திய ஞானம் விரும்பும்..!
செந்தளிரில் அமர்ந்து
கொந்தளித்து பசுந்தழல் கொளுத்து
அந்திக் கொலுசொலிகளின் அதிர்வில்
முந்திக் கைதட்டும்-உலக(ம்)ப்பந்தியில்
முதலாவதாய் முட்டும் தமிழெழுத்து..!
இருப்பாய் நண்பா நெருப்பாய்..!
உனக்கு நீயே ஒளியாய் இரு..!
-திருமூர்த்தி