பிரிவிலும் காதல்
நீளமான இரவு...
நெடுந்தூர கற்பனை...
தொடுந்தூர தனிமை...
அதிகாலை அமைதி...
அசைந்தோடும் பாடல்...
அழியாத தேடல்...
இவை அனைத்தையும் நான் நேசித்துக்கொண்டிருக்க...
அவையோ இப்போது உன்னை நேசிக்க தொடங்கிவிட்டன...
உரையாடி கழிந்த நேரங்களின் இடையே...
ஊமையாக கிடக்கும் சில நிமிடங்களும்...
உன்னுடன் உரையாட தொடங்கிவிட்டன இன்று...
உன் அனுமதி இன்றி...