காதல் பாடல்

ஆவாரம் பூவே ஆதாரம் நீயே
சேதாரம் செய்யாதே நெஞ்சை
வேரோடு கொய்யாதே

காதல் என்னும் கோயிலில்
தீபம் ஒன்று ஏற்றினாய்
பாலையான நெஞ்சினில்
பாலை நீயும் ஊற்றினாய்
விழியின் வழியாலே

ஆவாரம் பூவே

உன் கண்ணிலே மையை வைத்து
என் மெய்யினை வென்றாயே
உன் சொல்லிலே பொய்யைவைத்து
உண்மையினை கொன்றாயே
வானத்து தேவதை எல்லாம்
உன்னழகை கொஞ்சுமடி
ரதிதேவி மேனகை எல்லாம்
முன்னழகில் கொஞ்சமடி
அழகே அமுதே
நானும் உந்தன் தஞ்சமடி

ஆவாரம் பூவே

உன் பார்வை எந்தன் மீது
நீ வீசு போதுமடி
நான் வாழ ஓரிரு வார்த்தை
நீ பேசு வேதமடி
மேகத்து நீர்த்துளி எல்லாம்
உனைப் பார்க்க ஏங்குதடி
மழையாக மண்ணில் வந்து
உன் மடியில் தூங்குதடி
உயிரே உறவே
உயிரைக் காதல் கொல்லுதடி

ஆவாரம் பூவே

எழுதியவர் : புதுவை குமார் (30-Jan-19, 9:27 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kaadhal paadal
பார்வை : 97

மேலே