தமிழ் கிறுக்கி
தமிழ் கிறுக்கி ...
இது நான் தான்
காதல் கிறுக்கு
காம கிறுக்கு
பணம் மீது கிறுக்கு
பதவி கிறுக்கு
நிஜமான கிறுக்கு
நடிக்கும் கிறுக்கு
இப்படி பல
கிறுக்குகளை
பார்த்துள்ளேன்
ஏதோ எனக்கு
கொஞ்சம் அதிகமாய்
தமிழ் கிறுக்கு
பிடித்து விட்டது
கவிதைகளையும்
கதைகளையும்
கட்டுரைகளையும்
நாவல்களையும்
கிறுக்கி கிறுக்கி
பார்க்கிறேன்
நான் ஒரு கிறுக்கி.....
தமிழ் படித்து
தமிழ் பேசி
இன்புறுகிறேன்
குணப்படுத்துவது
கடினம் தான் ....!!!