புத்தாண்டு கொண்டாடியவர்கள்

புத்தாண்டு கொண்டாடியவர்கள்

விடியலை உணர்த்த
கீச்..கீச்..சத்தத்துடன்
வானத்தில் பறவைகளின்
கூட்டம்

அந்த இருட்டில்
சைக்கிளில் வந்து
பேப்பரை வீசி
சென்றான் சிறுவன் ஒருவன்

மாடு பசிக்கு அழைக்க
புல்லு கட்டை
சுமந்து செல்கிறான்
பால்காரன்

தின கூலி
வேலைக்கு ஆண்களும்
பெண்களும் அடித்து பிடித்து
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

வழக்கம் போலத்தான்
சூரியன் விழித்து
எழுந்து வந்திருக்கிறான்

இந்த நாள்
வழக்கம்
போல்தான் !

என்றாலும் பல
வீடுகள் இன்னும்
தூங்கி கொண்டிருக்கின்றன

ஓ இவர்கள் வருடம்
பிறந்து விட்டதாய்
நாளை வரவேற்று
நள்ளிரவில் புத்தாண்டு
கொண்டாடிவிட்டு

இழுத்து போர்த்து
தூங்கி கொண்டு
விடிந்து விட்ட
முழு நாளையும்
கழித்து கொண்டிருக்கிறார்கள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-Jan-21, 10:09 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 67

மேலே