தினக்கூலி
ஒவ்வொரு விடியலின்
விளிம்பில் வழியனுப்பி நின்று....!
ஒவ்வொரு இரவின்
முடிவில் எதிர்பார்த்து கொண்டு ...!!
வாழ்க்கை பயணத்தின்
கனவுகளை கண்ணெதிரே
நினைவாக்கும் வாய்ப்பாய் நம்பி
நம் உறவுகளை
வழி அனுப்பி
வைக்கிறோம் ..
புதுமை செய்வார்கள்
என்ற எதிர்பார்போடும்
நாளை விடிந்தால்
துன்பங்கள் விலகும்
என்கிற நம்பிக்கையோடும்
காத்து கிடக்குறோம்....
இதுவும் கடந்து போகும் .....