உனக்காக

கண்கள் காணும்
காட்சிகளையும்
இதயம் காணும்
கனவுகளையும்
நம்பாமல் திரிந்தேன்!

தனிமையில் இனிமை
கண்டும்
இன்பம் கண்டும்
இயல்பாய் இருந்தேன்!

காதல் விதைத்து
காதல் விதைத்து
கனவு காண சொன்னாய்
கண்கள் இணையும்
இனிமை பழக்கி தந்தாய்!

எறும்பு கடித்தாலும்
வலி என்று
விலகி போகும் என்னை
உன் நினைவை நெஞ்சிலும்
காதலை கையிலும்
சின்னமாய் முத்திரையிட
செய்தாய்!

எல்லாம் தெரிந்தும்
எல்லாம் அறிந்தும்
எல்லாம் புரிந்தும்
புரியாதவளாய் ஏங்குகிறேன் ...!

மரங்களுக்கு இடையில்
காற்றை கிழித்து செல்லும்
வெகுதூர பயணம்
உன்னோடு வேண்டும் என்று ...!

வரம் வேண்டி
தவம் பூண்ட
முனிவரை போல்
கண்கள் மூடியபடி
இதழ்கள் கலக்க வேண்டுமென்று...!

சேர்த்து வைத்த
ஆசை மொத்தமும்
கட்டில்மீது கலந்த பின்பு
ஓய்ந்துபோய் உன் மடி
சேர வேண்டும் என்று .....!!!

உன் கால்கள் மீது
என் கால்கள் இட்டு
உன் மார்பு மீது
என் தலை சாய்த்து
களைப்பு நீங்க
உறங்க வேண்டுமென்று!

மனம் சாட்சியாய்
நீ என்னை மனம்
முடிக்க வேண்டும் என்று ..........!!!!!

நம் உறவின்
புனிதம் உணர
உன் உயிர் வித்தை
நான் பெற்றெடுக்க
வேண்டுமென்று.......!!!!!

மரணிக்கும் போதும்
உன் மடி வேண்டுமென்றும்
வாய்ப்பில்லை என்றால்
உன் கரம் வேண்டுமென்றும்
இயலாது என்றால்
உன் கண்களாவது
கலக்க வேண்டுமென்றும்
எதிர்பார்த்து வாழ்கிறேன்
எதிர்பார்ப்பு இல்லாதவள்
நான் என்ற
பொய் மட்டும் கூறி கொண்டு.......!!!!!!!

---
உன் நான்

எழுதியவர் : (12-Dec-19, 12:30 pm)
சேர்த்தது : பாக்கியலட்சுமி
Tanglish : unakaaga
பார்வை : 243

மேலே