விதைத்ததை அறுக்கிறான்
நிஜங்களோடு நிறைய
கனவுகள் சுமந்து
ஓடிக்கொண்டிருக்கிறது மனிதம்
உறக்கத்திற்கு விழிப்பிற்கும்
இடையே ஓட்ட பந்தயம்
நெடுந்தூர ஓட்டத்திற்குக்பின்
கொஞ்சம் உணவு
நிதானமற்ற நிஜங்களாக
மனிதர்கள்
நிலைத்து நிற்பது
சில நிமிடம்
நிலையாடி முன் மட்டும்..!!
முறுக்கி முறுக்கி
ரசிக்கும் மீசையும்
கோதி கோதி
பார்க்கும் கூந்தலும்
திரும்ப திரும்ப
ரசிக்கும் முகமும்
எப்போதும் அழகுதான் ...!!!
அவ்வப்போது
அவசர தீர்மானங்கள்
அரை மணிநேரம்
நடைமுறையில் அவை ...!
உன்மேல் இமயம்போல்
குவிந்து கிடக்கும்
அன்பு ஒருபுறம்
கண்கள் மூடியபடி
அன்பை தேடித்திரியும்
குருடனாய் நீ மறுபுறம்
அத்தனைக்கும் ஆசை
அரைகுறை நிம்மதி
இழந்தவை நிறைய
இனி கிடைப்பதுதான்
வாழ்க்கை !!!
என்றும் மாறா
மாற்றங்கள் கூட
இப்பொழுது மாறிவிட்டன
தொப்பி பொம்பைக்கு
அழும் குழந்தைக்கு
அது கிடைத்ததும்
கண்ணாடி பொம்மையின்
மேல் ஆசை .....
தூக்கி எரிந்தது
தொப்பி பொம்மையை....
கண்ணாடி உடைந்தும்
தொப்பியை தேடினால் ??
நிலையில்லா மனம் கொண்ட
நிலை கண்ணாடி தான்
மனிதன் ....
விதைத்தாய்
அறுக்கிறான் ....!!!