எதுவும் நிலையில்லை

சில காயங்கள் கண்ணீராக.., சில ஏமாற்றங்கள் மௌனங்களாக.., செய்யப்பட்ட பிழைகளுக்கு பலனாய் கிடைக்கப்பெற்ற பரிசுகள்... அனைத்திற்கும் என் தன்மானம் ஒன்றை மட்டுமே பனையம் வைத்தேன்..., இன்று அதுவும் உண்மையில்லை என்றறிகையில் வாழ்க்கை என்னை ஏளனமாய் சிரிக்கையில் மரணம் கூட தூரமாகி என்னை வதைப்பதன் வன்மம் உணரமறுத்த கோதையாய்...!

எழுதியவர் : சரண்யா (21-Jan-20, 6:15 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : ethuvum nilaiyillai
பார்வை : 237

மேலே