பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தோற்றுப்போனேன் கோபப்படுதலில் முதன்முறையாக..,
என் ச௧ோதரா...உன்
நகைச்சுவை நயங்களால்..!
நெகிழ்ந்து நின்றேன் சற்றே..,
கவலைகள் மறந்திட செய்யும்
உன் யதார்த்தப் பேச்சுக்களால்..!
பூவுதிர்க்கும் புன்னகையில்
'விஷம்' என்ற உன் வார்த்தைகளில் உணர்ந்தேன்..,
தங்கையை சீண்டிப்பார்க்கும் அண்ணணின் குறும்புத் தனத்தை..!
காலையில் ஒரு காலை வணக்கம்...,
மதியம் உணவு முடிந்ததா என்ற வினவல்...,
மாலையில் வாக்குவாதங்கள்... என
அன்றாட நாட்குறிப்பில்
தவறவிட்ட நிகழ்வுகளும் பதிவாகியது
அவரவர் செல்பேசிப் புலனத்தில்..!
உன் அன்னை போல் உன் வரவை புவியும் எதிர்நோக்கிய நாள் இன்று..!
வெற்றிகள் குவியட்டும் வாழ்வில்
வசந்தம் வீசட்டும்
வெளிச்சம் ஒளிரட்டும்
நித்தமும் உன் பொழுதாகட்டும்
நொடிகள் உனது படிகளாகட்டும்...!
என்றும் இன்பம் உன் வாழ்வில் பெருகட்டும்...!
உனக்கு இந்த தங்கையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா....
வாழ்த்துக்களோடு என்றும் உன் தங்கையின் அன்பும்...

எழுதியவர் : சரண்யா (8-Mar-18, 12:05 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
பார்வை : 296

மேலே