கல்லூரி காலம்

கனவுகளைச்
சுமந்து கல்லூரி வாசலில் அடியெடுத்து வைத்த நிமிடம்....
காற்றில் கால்கள் மிதந்த அந்த தருணம்....
உன் பேரென்ன என்ற அன்புத்தோழியின் அறிமுக வார்த்தை,
திடுக்கிட்டு விழித்த அவளின் முகமும்...
ஏனோ ,
நாட்களும் நகர்ந்தோடியது,
காலங்களும் கரைந்தோடியது....
கூடியடித்த கொண்டாட்டங்களும்,
போட்டிப்போட்ட வெற்றியும் தோல்வியும்,
சண்டையிட்ட தோழிகளும் ,
சமாதானமிட்ட பேராசிரியையும்,
புரிந்துக் கொண்ட உறவுகளாய்- இன்றும் ,
பிரிந்து சென்று வாழும்-என்றும்,
உயிரில் கலந்து சென்ற நட்புகளின் நீங்காத நினைவுகளை மறக்க முடியுமா?

எழுதியவர் : இரா.சுடர்விழி (8-Mar-18, 1:43 pm)
சேர்த்தது : சுடர்விழி ரா
Tanglish : kalluuri kaalam
பார்வை : 282

மேலே