இ மெயிலில் வந்த வாசகன்
நண்ப...
ஒன்று சொல்லவா
உனது கவிதைகள்
சகிக்க முடியவில்லை
நடுநிசி நேரத்தில்
தகரத்தால் தேய்த்து
கிழிப்பது போன்றவொரு
வாக்கியக்கூச்சல்...
ஓடியாடி தேடிப்பிடித்ததாய்
உன்மத்தம் கொண்டு
நீ சொல்லும் கவிவரிகள்
காலனைக் கூட கொல்லும்.
ஏற்றுக்கொள் நண்ப...
உன்னிடம் கவிதை
என்று எதுவும் இல்லை.
எலிப்பொறியில் மிஞ்சிய
விஷம் தோய்ந்த வடையாய்
சில நமர்த்த வார்த்தையும்
குடல் பிறட்டும் வரிகளும்...
விட்டுவிடு நண்ப...
முட்டுச் சந்தில்
முனைவர் பட்டம்
கிடைக்கும் நன்நாட்டில்
உனக்கொரு கவிஞர்
பட்டம் கிடைத்தே விடும்.