Vidhya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vidhya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Dec-2017
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  6

என் படைப்புகள்
Vidhya செய்திகள்
Vidhya - எண்ணம் (public)
29-Jul-2018 10:05 am

குழந்தையடா  நான்!
தூக்கி கொஞ்சப்பட வேண்டிய வயதில்!
வாழவே அஞ்சப்பட விட்டதேனோ!!!
குமரி பருவம் அடையா என்னை!
குதறி பருகி அடைந்த சுகம்தான் ஏதோ!!!
உன் புணர்தலில் 
நான் உணர்ந்தது என் வலி மட்டுமே!!
புரியவில்லையே!😢
தாக்கி விழும்போதும்!
தவறிதானே விழுகிறராய் என்றிந்தேன் !!
முத்தமிடும்போதும்!
முதியனுக்கு முற்றியது பாசமென்றே இருந்தேன்!
மூஞ்சுமுட்டும்போதல்லவா உணர்ந்தேன்!
முக்கியமான ஒன்றை இழக்கிறோமென்று!
அறிவியல் அறிவுடன்!
கலவியல் அறிவும்! ஊட்டப்பட்டிருந்தால் 
புரிந்திருக்கப்படுமோ!!
இந்த பிஞ்சி உடம்பில் !
ஏறிய நஞ்சே இன்னும் இறங்கலையே!
நானும் பிச்சித்திண்கிறேன் என்று இன்னொறுவன் !
போதுமடா!!
வளர்ச்சியே அடையா இவ்வுடம்பில்!
தளர்ச்சியுற்ற முதியவன் கண்ட
கிளர்ச்சித்தான் ஏதோ!!
காவலாய் இருக்கவேண்டியவன் !
இன்னொறுவனுக்கு காவல் வேலை பார்த்தானே!!
நான் கொண்ட வலியை..காணொலியாய் கண்டுகளித்தனரே!!
கதறி அழுவதற்கு குரல் கொடுக்கா இறைவன்!
நாய்கள் 
குதறி உண்பதற்கு இவ்வுடல் கொடுத்தானோ!!
பருவமே அடையவில்லையே 
பருகிதிண்றனரே!
உருவமே முக்கியமில்லை என்று
உல்லாசம் பூண்டனரே!!
தொட்டது பெண் என்று களிப்புற்றாயே!
தொடப்பட்டது உன் பெண் என்றாலும் இதே நிலைதானோ!!
பெண்களை காக்க படைக்கப்பட்ட ஆண்கள் !!
தங்களை காக்க படைத்துக்கொண்டன ஆணுறைகள் !!
ஒரே தீர்வுதான்!
இக்கயவர்களின் 
ஆண்மைத்தன்மை அகற்றப்படவேண்டும்!
அண்டமே அஞ்ச பட வேண்டும்.. !
தவறான சிந்தனை! சிந்தையிலே வந்தாலும் தலைமை சிதரப்படும் என்று.. 
பெண்கள் பாதுகாக்க பட வேண்டியவள் !!
காமத்திற்கு காவுக்கொடுக்க அல்ல..!!!!!!!
                         ச வித்யா




மேலும்

வரிகளுக்கு உயிர் இருந்து இருந்தால்.....கொன்று இருக்கும்.... சட்டதின் பாய்ச்சல்.....தாமதமே......அதற்குள் ஆயிரம் அவலங்கள் நடந்துவிடும்... நாங்கள் என்ன பாவம் செய்தோம் உங்களுக்கு இறையாக..... உண்மை தன்மை அறிந்தவுடன் மக்கள் மத்தியில் அவனை கொன்று இருந்தது இருந்தால் அடுத்த மிருகம் அஞ்சி இருக்கும்..... இனி சட்டத்தை நாங்கள் தான் கையில் எடுக்க வேண்டும்..... 29-Jul-2018 11:38 pm
Vidhya - Vidhya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2018 12:12 am

சந்தோசம்மட்டும் அரிந்தவளுக்கு
தன் தோஷத்தை நினைவூட்டி!!!
செல்லமாய் வளர்ந்தவளை
செக்கிழுக்கும் அடிமையாக்கி!!!!
சட்டம் பேசிதிரிந்த சாதகப்பறவையை
கட்டம் என்னும் ஜாதகவடிவில் அடக்கி!!!!
தன் சரிப்பாதியை கண்டுவிட்டாலும்
தன் சாதிப்பிரிவிலே கட்டிக்கொடுத்து!!
பல பிரச்சனைகளில் வீரமாய் நின்றவளை
வரதட்சனையில் பேரம்பேசி விற்பதுதான்!!!!!
இன்றைய பெற்றோர்களால் நிச்சியக்கப்படும் திருமணம்!!!!!
வித்யா ச

மேலும்

நன்றி தோழர் 17-Mar-2018 6:37 pm
உண்மை வரிகள், மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்!! 17-Mar-2018 10:29 am
Vidhya - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2018 12:15 am

பணத்திற்காக உறவுக்கொண்டால் விபச்சாரி!!!!
உறவிற்காக
பணத்தைகொடுத்தால்
சம்சாரி!!!
பெரிய வித்தியாசமில்லை!
ஒன்று தூற்றப்படுகிறது
மற்றொன்று போற்றப்படுகிறது!!!
சமூகத்தின் பார்வையில்
வித்யா ச

மேலும்

திருமணத்தை வெறும் இரு உடல்களின் சங்கமமாக பார்ப்பவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து ...சார் திருமணத்தின் புனிதம் அறிந்த யாரும் இதை ஏற்கமாட்டார்கள் .... 17-Mar-2018 8:45 am
பெட்ரண்ட் ரஸ்ஸல் என்ற அறிஞர் திருமணம் சட்டம் அனுமதித்த ஒரு விபச்சாரம் (Leagalised prostitution ) என்றார் . கருத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா ? 17-Mar-2018 8:27 am
சமூகத்தின் நிதர்சனம் 17-Mar-2018 8:17 am
அருமையா சொல்லிருக்கீங்க சமூகத்தின் உண்மையை.... 17-Mar-2018 8:15 am
Vidhya - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2018 12:14 am

ஊரார்க் கண்படாமற்
பொத்திகாத்த பெண்ணை!!!
போரார் கண்ப்பட்டு குத்தி சாய்ப்பதுதான்!!!
பெண்பார்க்கும் படலம்….
வித்யா ச

மேலும்

Vidhya - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2018 12:12 am

சந்தோசம்மட்டும் அரிந்தவளுக்கு
தன் தோஷத்தை நினைவூட்டி!!!
செல்லமாய் வளர்ந்தவளை
செக்கிழுக்கும் அடிமையாக்கி!!!!
சட்டம் பேசிதிரிந்த சாதகப்பறவையை
கட்டம் என்னும் ஜாதகவடிவில் அடக்கி!!!!
தன் சரிப்பாதியை கண்டுவிட்டாலும்
தன் சாதிப்பிரிவிலே கட்டிக்கொடுத்து!!
பல பிரச்சனைகளில் வீரமாய் நின்றவளை
வரதட்சனையில் பேரம்பேசி விற்பதுதான்!!!!!
இன்றைய பெற்றோர்களால் நிச்சியக்கப்படும் திருமணம்!!!!!
வித்யா ச

மேலும்

நன்றி தோழர் 17-Mar-2018 6:37 pm
உண்மை வரிகள், மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்!! 17-Mar-2018 10:29 am
Vidhya - முனைவர் நந்துதாசன் நாகலிங்கம் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1.புதுக்கவிதை, உரைநடை கவிதையாக இருக்கலாம்...
2.பதினான்கு வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே எழுத வேண்டும்

மேலும்

முடிவு எப்பொழுது அறிவிக்கப்படும் ? ஆவலுடன்... 09-Oct-2018 12:43 pm
மேலும்...
கருத்துகள்

மேலே