குரு பச்சை - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : குரு பச்சை |
இடம் | : விழுப்புரம், பாசர் |
பிறந்த தேதி | : 02-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 21 |
பணத்திற்காக உறவுக்கொண்டால் விபச்சாரி!!!!
உறவிற்காக
பணத்தைகொடுத்தால்
சம்சாரி!!!
பெரிய வித்தியாசமில்லை!
ஒன்று தூற்றப்படுகிறது
மற்றொன்று போற்றப்படுகிறது!!!
சமூகத்தின் பார்வையில்
வித்யா ச
ஆச ரொம்ப வச்சு வந்தேன்
அத்த பொன்னே உன்மேல
வெட்டி வெட்டி பேச்சில்
வெட்டறுவா வீசுறியே
தொட்டு தொட்டு பேசி
தேகம் சூடு ஏத்துறியே
பாவாடை தாவணியில்
பக்கவாட்டில் உன் இடுப்பு
பருவதையே மாத்துதடி
பக்கத்துல நெருங்கிவந்த
பக்குவமாய் நழுவுரியே
ஒத்த வார்த்தை நீ சொல்லு
தாலி ஒன்னு செஞ்சுவாறேன்
பத்தமடை பாய் வாங்கி
தேன்நிலவு நாம் போவோம்
பக்கத்துல வாடி புள்ள.........
நீ என்னவா ஆகணும்னு
நீயே தீர்மானம் செய்
அதற்கான வழிகளை தேடு
உனக்கு தேவையானதை
நீயே உருவாக்கு
எந்த செயலை செய்தலும்
இழிவாக நினைக்காதே
கஷ்டங்களை கண்டு
ஒருபோதும் பின் வாங்காதே
கஷ்டத்தில் உன்னை ஈடுபடுத்திக்கொள்
எப்போதும் எந்த செயலை
செய்யும்போதும் முடியும் என்று
நினை செய்யும் செயலை
முழு மனதோடு செய்
வெற்றி உன்னைவிட்டு விலகாது ....
அடியே உனக்காக நானிருந்தேன்
என் உயிராக நினைச்சிருந்தேன்
ஒத்த வார்த்தை சொல்லாமல்
என்னை விட்டு போன்றவளே
நீ இல்லாமல் என் நிழல்கூட
தனியாட்சி என்னோடு சேராமல்
நாமிருந்த நாட்கள் எல்லாம்
கண்ணோடு கனவாச்சு
அதையே நினச்சு நினச்சு
கண்ணீரும் கானல் நீர்ச்சு
கண்ணே உன்னை காணாமல்
கண்ணிரண்டும் உறங்கவில்லை
பகலும் இரவாக இருளாட்சி
என் இரவும் பகலும்
நீ இல்லாமல் கரிசல் காடசி
போகும் பாதை புரியாமல்
என் பாதை தொடர்ந்தாச்சி.....
பத்து மதம் சுமந்து
பக்குவமாய் பாதுகாத்து
பதிய உணவு உண்டு
பயங்கரத்துக்கும் அப்பாலான
வலியை பொறுத்து கொண்டு
இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய
தாயின் மறு பிறவிக்கு - நாம்
வாசிக்கும் முதல் கவிதை
அம்மா......
தாய்மையின் முதல் சந்தோசம் .
இதுவரை கண்டுவிடாத மாற்றம்
என்னுள் நான் கண்டேன்
எப்போதும் பார்க்கும் உன்னை
இன்று புதுமையாக பார்க்கிறேன்
அழகின் அதிசயத்தை இன்று
உன்னுள் காண்கிறேன்
கவிஜர்கள் எழுதிய கவிதைக்கு
அர்த்தம் புரிகிறது
மௌனம் என்ற வார்த்தை
தெரியாத நம்மிடம்
இன்று மௌனமே ஆள்கிறது
வாய் பேசும் வார்த்தைகள்
குறைந்து கண் பேசும்
பாஷை உருவாகிறது
இடைவெளி இல்லாத நம்மிடம்
இன்று மீட்டர் அளவில்
இடைவெளி நிலவுகிறது
ஏன் இந்த மாற்றம் இறைவா
நீ படைத்த அற்புதம் இதுதானா
அதற்கு காதல் என்ற பெயர்தானா......
சொர்க்கத்தின் முகவரியை
தேடி தேடி அலைகிறேன் - பெண்ணே
உன்னை கண்டதும் கண்டுகொண்டேன்
என் சொர்க்கத்தின் முகவரி
நீதான் என்று ....
அடியே பெண்ணே
தினமும் உன்னை விழி மேல்
விழி வைத்து பார்க்கிறேன்
ஜன்னல் வழியாக
ஜன்னலே இல்லாத - என்
இதயத்தில் நீ வருவா என
காத்திருக்கிறேன் உனக்காக........