நட்பில் பிளவு காதல்
இதுவரை கண்டுவிடாத மாற்றம்
என்னுள் நான் கண்டேன்
எப்போதும் பார்க்கும் உன்னை
இன்று புதுமையாக பார்க்கிறேன்
அழகின் அதிசயத்தை இன்று
உன்னுள் காண்கிறேன்
கவிஜர்கள் எழுதிய கவிதைக்கு
அர்த்தம் புரிகிறது
மௌனம் என்ற வார்த்தை
தெரியாத நம்மிடம்
இன்று மௌனமே ஆள்கிறது
வாய் பேசும் வார்த்தைகள்
குறைந்து கண் பேசும்
பாஷை உருவாகிறது
இடைவெளி இல்லாத நம்மிடம்
இன்று மீட்டர் அளவில்
இடைவெளி நிலவுகிறது
ஏன் இந்த மாற்றம் இறைவா
நீ படைத்த அற்புதம் இதுதானா
அதற்கு காதல் என்ற பெயர்தானா......