உன்னை விட்டு நான்
சதிகாரர்களின் சதியறியா சிறு குழந்தையாக அவர்களை நம்பி விட்டாயே,
உன் மேல் நான் தொடுத்த பாசாங்குசம் கெடுக்க மோசாங்குசம் பாய்ச்சி உனை தடுத்து வைத்தனர்,
பாசாங்குசம் எடுத்து எமன் எனைத் துரத்தி வருவது போல் தெரிகிறது,
நெஞ்சோரம் நங்கூரம் பாய்ச்சியது போல வலிக்கிறது,
துஞ்சாமல் நான் படும் துயரம் போதும், மிஞ்சாமல் அவர்களை
கெஞ்சி எனைச் சேர்வாய் என் அஞ்சுகமே🌻