காதல் முத்தம்

கூந்தலில் குடியேறும்
மல்லிகை பூ போல
உன் கூந்தலை வருட ஆசை.....

ஒத்த விரலால் தொடரும்
குங்குமத்தை போல - உன்
நெற்றியில் முத்தமிட ஆசை...

காந்த விசை கொண்ட
இரு கண்களுக்கு
முத்தமிட ஆசை....

ஆசை.. ஆசை... முத்தமிட ஆசை....

சிரித்தாள் கன்னத்தில்
குழி கொள்ளும் - என்
மனதை வீழ்த்திய
கண்ண குழிகளில்
முத்தமிட ஆசை...

கோவைப் பழம்போல்
சிவந்த நிறம் கொண்ட
இதழில் முத்தமிட ஆசை....

ஆசை.. ஆசை... முத்தமிட ஆசை....

என் உறவு உருவாக்க
மாங்கல்யம் முடிசூடும்
கழுத்தில் முத்தமிட ஆசை....

உள்ளத்தில் என்னவென்று
ஒருவருக்கும் தெரிந்திடாத
பத்திரமாய் பாதுகாத்து
பிள்ளைக்கு பசி தீர்க்கும்
குழந்தையாக மார்பகத்தில்
முத்தமிட ஆசை....

பெற்றவளின் உறவுகளை
ஒருபோதும் மறந்துடாத
உயிர்காக்கும் முடிச்சுகளாய்
உன் வயிற்றில் சுழி கொண்ட
தொப்புளில் முத்தமிட ஆசை...

ஆசை... ஆசை... அடக்கமுடியாத ஆசை...

உறவுகளை நாம் கொண்டு
உன்னுடன் நான் சேர்ந்து
புது உறவினை உருவாக்கும்
தொடை இடைகளில் - வழிகளாய்
கடவுளால் அமைக்கப்பட்ட
உறுப்பினிலே முத்தமிட ஆசை...

புது உறவினை - நீ சுமந்து
பூலோகத்தில் வளம் வர
பலம் கொடுக்கும் கால்களுக்கு
முத்தமிட ஆசை....

பாத்து மாதம் நீ சுமந்து
பக்குவமாய் பெத்தெடுக்க
பாதங்களால் வலிமை கொள்ளும்
உன் - பாதங்களில்
முத்தமிட ஆசை....

ஆசை... ஆசை... உன்மேல் நான் கொண்ட காதல் ஆசை

சொன்னாலும் புரியாது
சொர்கத்திலும் கிடைக்காது......



தவறேதும் கண்டிருந்தால் மன்னிக்கவும்....

எழுதியவர் : குரு பச்சை (28-Feb-18, 4:52 am)
சேர்த்தது : குரு பச்சை
Tanglish : aasai mutham
பார்வை : 227

மேலே