வயது முதிர்ந்த இலக்கிய வாசகனின் வருத்தம் என்னவெனில்

வயது முதிர்ந்த இலக்கிய வாசகனின் வருத்தம் என்னவெனில்..!

கடத்தப்பட்டு
சரக்குந்தில் ஏற்றப்பட்டு
கொண்டிருக்கும்
பொக்கிசமாய் பாதுகாத்த
நூல்கள்

வெறுமனே வேடிக்கை
மட்டுமே பார்த்து
கொண்டிருக்க முடிகிறது
அவரால்

இருபதில் ஆரம்பித்து
எழுபது வரை
இலக்கிய ஆர்வத்தில்
சேமித்து வைத்திருந்த
அத்தனையும்

இடத்தை அடைத்திருக்கிறது
என்னும் காரணம்
மட்டுமல்ல இத்தனை
செலவு மிச்சம்
வைத்திருந்தால்..!
என்னும் குதர்க்க
வாதத்துடன்

அந்த நூல்கள்
மட்டுமல்ல அவரையும்
கடத்தப்பட தடை
கல்லாய் இருப்பது

ஏதோ கொஞ்சமாய்
வாங்கி கொண்டிருக்கும்
ஓய்வூதியம் மட்டுமே..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (15-Feb-25, 1:15 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 4

மேலே