புரியாத பாதை
அடியே உனக்காக நானிருந்தேன்
என் உயிராக நினைச்சிருந்தேன்
ஒத்த வார்த்தை சொல்லாமல்
என்னை விட்டு போன்றவளே
நீ இல்லாமல் என் நிழல்கூட
தனியாட்சி என்னோடு சேராமல்
நாமிருந்த நாட்கள் எல்லாம்
கண்ணோடு கனவாச்சு
அதையே நினச்சு நினச்சு
கண்ணீரும் கானல் நீர்ச்சு
கண்ணே உன்னை காணாமல்
கண்ணிரண்டும் உறங்கவில்லை
பகலும் இரவாக இருளாட்சி
என் இரவும் பகலும்
நீ இல்லாமல் கரிசல் காடசி
போகும் பாதை புரியாமல்
என் பாதை தொடர்ந்தாச்சி.....