எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குழந்தையடா நான்! தூக்கி கொஞ்சப்பட வேண்டிய வயதில்! வாழவே...

குழந்தையடா  நான்!
தூக்கி கொஞ்சப்பட வேண்டிய வயதில்!
வாழவே அஞ்சப்பட விட்டதேனோ!!!
குமரி பருவம் அடையா என்னை!
குதறி பருகி அடைந்த சுகம்தான் ஏதோ!!!
உன் புணர்தலில் 
நான் உணர்ந்தது என் வலி மட்டுமே!!
புரியவில்லையே!😢
தாக்கி விழும்போதும்!
தவறிதானே விழுகிறராய் என்றிந்தேன் !!
முத்தமிடும்போதும்!
முதியனுக்கு முற்றியது பாசமென்றே இருந்தேன்!
மூஞ்சுமுட்டும்போதல்லவா உணர்ந்தேன்!
முக்கியமான ஒன்றை இழக்கிறோமென்று!
அறிவியல் அறிவுடன்!
கலவியல் அறிவும்! ஊட்டப்பட்டிருந்தால் 
புரிந்திருக்கப்படுமோ!!
இந்த பிஞ்சி உடம்பில் !
ஏறிய நஞ்சே இன்னும் இறங்கலையே!
நானும் பிச்சித்திண்கிறேன் என்று இன்னொறுவன் !
போதுமடா!!
வளர்ச்சியே அடையா இவ்வுடம்பில்!
தளர்ச்சியுற்ற முதியவன் கண்ட
கிளர்ச்சித்தான் ஏதோ!!
காவலாய் இருக்கவேண்டியவன் !
இன்னொறுவனுக்கு காவல் வேலை பார்த்தானே!!
நான் கொண்ட வலியை..காணொலியாய் கண்டுகளித்தனரே!!
கதறி அழுவதற்கு குரல் கொடுக்கா இறைவன்!
நாய்கள் 
குதறி உண்பதற்கு இவ்வுடல் கொடுத்தானோ!!
பருவமே அடையவில்லையே 
பருகிதிண்றனரே!
உருவமே முக்கியமில்லை என்று
உல்லாசம் பூண்டனரே!!
தொட்டது பெண் என்று களிப்புற்றாயே!
தொடப்பட்டது உன் பெண் என்றாலும் இதே நிலைதானோ!!
பெண்களை காக்க படைக்கப்பட்ட ஆண்கள் !!
தங்களை காக்க படைத்துக்கொண்டன ஆணுறைகள் !!
ஒரே தீர்வுதான்!
இக்கயவர்களின் 
ஆண்மைத்தன்மை அகற்றப்படவேண்டும்!
அண்டமே அஞ்ச பட வேண்டும்.. !
தவறான சிந்தனை! சிந்தையிலே வந்தாலும் தலைமை சிதரப்படும் என்று.. 
பெண்கள் பாதுகாக்க பட வேண்டியவள் !!
காமத்திற்கு காவுக்கொடுக்க அல்ல..!!!!!!!
                         ச வித்யா




பதிவு : Vidhya
நாள் : 29-Jul-18, 10:05 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே