பெண்மை குலத்தின் பீடைகள்

எதைச்சொன்ன போதுமே எங்கள் உரிமை
அதைச்சொல்ல நீங்கள்யார் என்பாய் -அதன்பேர்
சுதந்திரம் அல்லடி முப்பத் திருபல்
உதிர்ந்திடும் சொன்னேன் உனக்கு

அங்கத்தைக் காட்டல் அசிங்கம் எனச்சொன்னால்
சங்கத்தைக் கூட்டிக் குரல்கொடுப்பீர் -எங்களுக்கு
மட்டும்தான் பெண்மை அவசியமோ ஆணின்றி
கிட்டுமோ தாய்மை உமக்கு?

இடைகாட்டு கின்றாய் இளம்வாழை கொண்ட
தொடைகாட்டு கின்றாய் முலையின் -எடைகாட்டு
கின்றாய் இனியென்ன மிச்சம்?ஒரு கையளவு
வந்து பிறந்தவழி தான்.

கம்பன் பிறந்தாலும் காமம் பிறப்பதன்றி
இன்பத் தமிழ்க்கவி தோன்றாதே -வம்பாக
என்னைப் படைத்துவிட்டான் இந்தக் கழிசடைப்
பெண்ணை கவிபாட வென்று!

நால்பண்பு சொன்னாரே நற்குடிபெண் ணுக்கதில்
கால்பண்பு காணவும் கூடலையே -வேலம்பு
பாயும் விழியாளே உன்னைச் சுமந்ததற்குத்
தாயும் குனிவாள் தலை.

கொண்டவன் தான்ரசித்துக் காதல் புரிவதற்கே
கண்டவன் பார்க்கவன்று கட்டழகு- என்தவம்
செய்திருக்க வேண்டுமடி பெண்ணாய்ப் பிறப்பதற்கு
வைத்திருக்க வேண்டும் கொடுத்து!

மெய்க்காதல் எங்கே பிறக்கும் கடுங்காம
மெய்க்காதல் தான்பிறக்கும் ஊர்க்கண்கள் -மொய்க்கவே
சிந்தி தெறிக்கிறதே சீர்பெண்மை பாகங்கள்
சந்தி சிரிக்கிறதே சீ!

குனியாமல் ஆங்கே குவிமுலை தோன்றற்கு
அணியாமல் ஆடை வரலாம் -முனியாமல்
சிந்தித்துப் பாரடி சீர்கெட்டுப் போனபின்னால்
நொந்துமே என்ன பயன்?

கையிழுத்தான் என்றால் இழுக்காமல் என்செய்வான்
மெய்முழுதும் காட்டி மனம்கலைத்தால்? -ஐம்புலன்
கட்டும் துறவிக்கும் காமம் துளிர்விட
தட்டும் சபலமே தான்!

போகின்ற பேர்க்கும் வருகின்ற பேருக்கும்
ஆகட்டும் என்றால் அதுகற்போ? -தோகைமீர்!
தாயென்றே உம்மை அழைத்தால் அழைக்கின்ற
வாயுமே வெந்து விடும்!

தாய்தோன்ற வேண்டுமடி பெண்மை எதிர்வந்தால்
நாய்கூடக் கட்டாது உனையெல்லாம் -பாய்போடும்
அந்தரங்கம் கூடப் புனிதமென்று சொல்லிவைத்த
இந்துமதம் பட்டது இழிவு!

-காகுத்தன்

எழுதியவர் : காகுத்தன் (26-Dec-17, 6:08 pm)
சேர்த்தது : காகுத்தன்
பார்வை : 312

மேலே