கவி ப்ரியன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவி ப்ரியன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 05-Mar-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Apr-2010 |
பார்த்தவர்கள் | : 742 |
புள்ளி | : 89 |
பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை
யாருமே இல்லையே வெம்புதே மனம்.
பாதியில் போவதே பெண்களின் குணம்.
தீ கனல் ஆகுதே பாதைகள் தினம்.
அவளின்றி போகுதே நொடி நான் நடை பிணம்.
-கவி சதிஷ்
கார் மேகம் படை சூழ்ந்து.
காற்றெல்லாம் குதிரையை பறந்து.
துளியெல்லாம் மண் மீது முத்தங்கள் பொழிந்து.
ஆர்பரிக்கும் மழையை ரசித்திருந்தேன்.
என்னவள் குடை மறந்து.
மழை நனைக்கையில் உடலோவியம் தெரிந்து.
விரசமெல்லாம் எனக்குள் தொலைந்து.
புன்னகையில் எனை மறந்தேன்.
அந்த நொடி வரை என் விழிகள்.
மழை செய்த என்னவள் ஓவியத்தை
பிறார் ரசிப்பார்களே - என்ற
உறுத்தல்களால், மழையையே வெறுத்தேன்.
ஒவ்வொரு நாளும்
உன் பிறந்த நாளாய்
இருக்க கூடாதா?
தினந்தோறும் உன்னிடம்
பேச!
காதல் இனித்திடும்
அவள் எண்ண ஓட்டத்தில்
நீ கோலமிடும் போது.
காதல் இனித்திடும்
அவள் கூந்தல் பூ வாசம்
உன் நாசி துளைக்கும் போது.
காதல் இனித்திடும்
அவள் மூக்குத்தி அழகில்
நீ உச்சுக் கொட்டும் போது.
காதல் இனித்திடும்
அவள் இதழோரம் தேன் துளியை
வண்டுகள் மொய்த்திடும் போது.
காதல் இனித்திடும்
விலகிய முந்தானையில்
நீ தாய்மையை பார்க்கும் போது.
காதல் இனித்திடும்
அவள் இடைதனிலே சேலை
மெல்லிய நதியாகும் போது.
காதல் இனித்திடும்
அவள் விரல் இடையில் பனித்துளிகள்
மோதிரம் ஆகும் போது.
காதல் இனித்திடும்
அவள் முதுகை பார்க்கையில்
உன் எதுகை மறக்கும் போது.
காதல் இனித்திடும்
அவள் பாத
கருநீர்வீழ்ச்சி போல
ஆறடிக்கூந்தல்
தேவையில்லை
குதிரைவால்
கூந்தலே போதும்
அபோதுதானே
உனது
பின்னழகு தரிசனம்
அடியேனுக்குக் கிட்டும்
பின்னழகு என்று
பின்னங்கழுத்தைச்
சொன்னேன்
அதற்கேன்
அடிக்க வருகிறாய்