காதல் இனித்திடும்

காதல் இனித்திடும்
அவள் எண்ண ஓட்டத்தில்
நீ கோலமிடும் போது.

காதல் இனித்திடும்
அவள் கூந்தல் பூ வாசம்
உன் நாசி துளைக்கும் போது.

காதல் இனித்திடும்
அவள் மூக்குத்தி அழகில்
நீ உச்சுக் கொட்டும் போது.

காதல் இனித்திடும்
அவள் இதழோரம் தேன் துளியை
வண்டுகள் மொய்த்திடும் போது.

காதல் இனித்திடும்
விலகிய முந்தானையில்
நீ தாய்மையை பார்க்கும் போது.

காதல் இனித்திடும்
அவள் இடைதனிலே சேலை
மெல்லிய நதியாகும் போது.


காதல் இனித்திடும்
அவள் விரல் இடையில் பனித்துளிகள்
மோதிரம் ஆகும் போது.

காதல் இனித்திடும்
அவள் முதுகை பார்க்கையில்
உன் எதுகை மறக்கும் போது.

காதல் இனித்திடும்
அவள் பாதச்சுவடுகள்
உன் கல்லறையாகும் போது.


-கவிசதிஷ்

எழுதியவர் : கவிசதிஷ் (13-Feb-14, 3:32 pm)
பார்வை : 145

மேலே