நினைவுகள்

காகிதத்தில் என் காதல்...
அவள் கணவனோடு என் காதலி...
காத்திருந்த என் நாட்கள் கண்ணீரானது...
என் இமைகளை நனைக்கும் தூரலொன்று,
என் கன்னம் நனைத்தது...
என் விரல்களின் அரவணைப்பில்,
சொல்லாத காதலுக்கு சுகம் அதிகம்
சொல்லாமலே போனால்,அதுவே ஒரு சோகம்...
என் நெஞ்சில் உள்ளதை எழுதுகின்றேன்
என் நிமிடங்களும் அவளை காதல் கொள்ள...
இப்படிக்கு
-சா.திரு-