கண்கள்

என்னவளே...
தயவுசெய்து உன் கண்களை மூடாதே
"இருட்டிப்போகின்றது" என் உலகம்...
ஆம்,
உன் கண்களுக்கு சொல்லி வை,
என்னவன் தொலைந்துப்போவான் என்று
உண்மையில்,
தொலைந்து விடுவேன்போலிருக்கிறது - உன்
இமைகள் இமைக்கும் சிறு நொடிப்பொழுதில்...
என் காதல் உன் கண்கள் என்பதால்...
இப்படிக்கு
-சா.திரு-