மழையை வெறுக்கிறேன்

கார் மேகம் படை சூழ்ந்து.
காற்றெல்லாம் குதிரையை பறந்து.
துளியெல்லாம் மண் மீது முத்தங்கள் பொழிந்து.
ஆர்பரிக்கும் மழையை ரசித்திருந்தேன்.

என்னவள் குடை மறந்து.
மழை நனைக்கையில் உடலோவியம் தெரிந்து.
விரசமெல்லாம் எனக்குள் தொலைந்து.
புன்னகையில் எனை மறந்தேன்.

அந்த நொடி வரை என் விழிகள்.
மழை செய்த என்னவள் ஓவியத்தை
பிறார் ரசிப்பார்களே - என்ற
உறுத்தல்களால், மழையையே வெறுத்தேன்.

எழுதியவர் : கவிசதிஷ் (1-Jul-14, 7:58 am)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 74

மேலே