Benito - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Benito |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 85 |
புள்ளி | : 7 |
மாய நிலையில் உழன்று கொண்டிருக்கும்
மானிடர்கள் உண்மை நிலையை
உணர்த்தவே கவிதை உரைக்கிறேன் இங்கு ,
மனிதத்தை வளர்க்க நினைக்கிறன் எங்கும்.
கோயில் பல தேடி திரிந்து ,
மருத்துவ மாடிப்படி ஏறி இறங்கி,
தாய்மை எண்ணும் நிகரில்லா நிலையடைந்து,
முகம்வாடி பிறக்குது குழந்தை முத்து.
முத்து, அதை தொட்டிலிட்டு
ஓய்வில்லாமல் பாட்டெடுத்து
உறங்குமாறு பாடிய காலம்
அது அன்று
முத்து, அதை வீட்டில்விட்டு
பாட்டு ஒன்றை பதிவு செய்து அருகில் வைத்து
வேலைக்கு செல்லும் காலம்
இது இன்று
பிள்ளைக்கு ஆகாதென்று தாய்ப்பால்
கொடுத்த காலம் - அது அன்று
தாய்க்கு அழகு குறையுமென்று புட்டிப்பால்
கொடுக்கும் காலம
தியாக ரத்தங்கள் ஆறாய் ஓட்டி,
உடல் தசைகள் உரமாய் போட்டு,
அவங்களை மண்ணாய் சேர்த்து,
சுதந்திர பயிராய் பெற்ற விடுதலையா இது ?
பகிர்ந்துண்ட மக்களை- லஞ்சம் என்ற
போர்வையில் மக்களை சுரண்டுவதா விடுதலை ?
நியம் கொண்ட நெஞ்சங்களை - பழி என்ற
போர்வையில் தீயிட்டு எரிப்பதா விடுதலை ?
பாரதி கண்ட புதுமை பெண்களை - காதல் என்ற ,
போர்வையில் பலாத்காரம் பல புரிவதா விடுதலை ?
மனிதர்களை மனிதர்களே ஒதுக்கி -இறைச்சி என்ற,
போர்வையில் கசையடிகள் பல கொடுப்பதா விடுதலை ?
உணர்வு கொண்ட மனிதர்களை -மதம் என்ற
போர்வையில் கொலைகள் பல புரிவதா விடுதலை ?
ஓன்று பட்ட கூட்டத்தை - தீவிரவாதம் என்ற
போர்வையில் அழிவுகள் பல புர
பீரு கொண்டு தெறிக்கும் சினத்தின் சீற்றத்தை ,
வீறு கொண்டு எவ்வாறு மாற்றுவேன் ?
தாரகைகள் அங்கே தவித்து கொண்டிருக்க-இங்கே,
சோறும் நீரும் ஒரு குறையோ ?
குவியல் குவியலாய் அங்கே மனித பிணங்கள் ,
கொன்று குவித்தவர் மானிட நரனோ ?
நீயும் நானும் நின்றிருக்க ,
மனிதம் மட்டும் மடிவது ஏனோ !?
பாலும் தேனும் கேட்கவில்லை பசிக்கு ,
உடலும் உயிரும் கேட்கிறோம் வாழ - என
கதறும் குரல்கள் உங்களுக்கு வெறும்
சிதறும் பதர்கள் தானோ ?
மதங்களை மட்டும் பார்க்கும் இவர்களில்
பீரு கொண்டு தெறிக்கும்(தீவிரவாத) சினத்தின் சீற்றத்தை ,
வீறு கொண்டு எவ்வாறு(மிதவாதமாக) மாற்றுவேன் ?
நாறி போன இந்த நானிலம் ,
தேறி போவது எப்போழ
மாசு மரு இல்லாமல் இருக்கும் மதிமுகம்,
சுருள் சுருளாய் சுருண்டிருக்கும் மேககேசம்,
ரோஜாக்களை உதிர்க்கும் சிகப்பான பூப்புன்னகை,
ராஜாக்கள் ஏங்கும் நவமான பவளப்பேச்சு,
ஆம் அந்த தேவதை காதலி , தேவை அந்த மைதிலி !!!
கைகளில் காகித பூக்கள்
கண்களில் கனவு பூக்கள்
மனதிலே பார பூக்கள்
மாடத்திலே வறுமை பூக்கள்
கணினி கற்ற மாய பூக்கள்
கலைகள் பெற்ற கல்வி பூக்கள்
வீரம் மறவா தமிழ் பூக்கள் -நாங்கள்
வேலை தேடும் விடியல் பூக்கள் !!!
வீதி என்றும் பாராமல் மது
வீழ்த்தி விட்ட தந்தை முகம்
காணுகின்ற பிள்ளைக்கு
புது உலகம் வேண்டுகிறேன்
சாதனைகள் செய்ய சொல்லி கல்விச்
சாலை இடம் போகையிலே
சாதி என்ன என்று கேளா
புது உலகம் வேண்டுகிறேன்
மாடி மீது நின்றபடி கிழிந்த
ஆடை கொண்ட பிள்ளை தனை
ஓட்டை குடிசையிலே காணுகையில்
புது உலகம் வேண்டுகிறேன்
கோடைகால தார் சாலை
காலை ஊன்றி வந்த ஒரு ஆளை
கையில் தட்டுடன் காணுகையில்
புது உலகம் வேண்டுகிறேன்
மூட்டை தூக்கும் தொழிளாலி தனியார்
பள்ளி ஒன்றை கடக்கையிலே
ஏங்கி வரும் பெருமூச்சு தீண்டுகையில்
புது உலகம் வேண்டுகிறேன்
மாற்றமுண்டு என்று சொல்லி
மடையராக்கும் ஒரு கூட்டம
கைகளில் காகித பூக்கள்
கண்களில் கனவு பூக்கள்
மனதிலே பார பூக்கள்
மாடத்திலே வறுமை பூக்கள்
கணினி கற்ற மாய பூக்கள்
கலைகள் பெற்ற கல்வி பூக்கள்
வீரம் மறவா தமிழ் பூக்கள் -நாங்கள்
வேலை தேடும் விடியல் பூக்கள் !!!