எப்போழுது
பீரு கொண்டு தெறிக்கும் சினத்தின் சீற்றத்தை ,
வீறு கொண்டு எவ்வாறு மாற்றுவேன் ?
தாரகைகள் அங்கே தவித்து கொண்டிருக்க-இங்கே,
சோறும் நீரும் ஒரு குறையோ ?
குவியல் குவியலாய் அங்கே மனித பிணங்கள் ,
கொன்று குவித்தவர் மானிட நரனோ ?
நீயும் நானும் நின்றிருக்க ,
மனிதம் மட்டும் மடிவது ஏனோ !?
பாலும் தேனும் கேட்கவில்லை பசிக்கு ,
உடலும் உயிரும் கேட்கிறோம் வாழ - என
கதறும் குரல்கள் உங்களுக்கு வெறும்
சிதறும் பதர்கள் தானோ ?
மதங்களை மட்டும் பார்க்கும் இவர்களில்
பீரு கொண்டு தெறிக்கும்(தீவிரவாத) சினத்தின் சீற்றத்தை ,
வீறு கொண்டு எவ்வாறு(மிதவாதமாக) மாற்றுவேன் ?
நாறி போன இந்த நானிலம் ,
தேறி போவது எப்போழுது -நேசம்
ஊ(ன்)றி போவது எப்போழுது !?