மது வேண்டாம் நண்பா

நண்பா!
வீடெது வீதியெது என்று கூடத் தெரியாமல்
செய்யும் மது உனக்கெதற்கு?

மணவாழ்க்கை கசந்திடுமே
மதுவிற்கு நீ அடிமையானால்!
மாலையிட்ட மங்கையின் மனம் நோகுமே
மதுவை நீ குடித்தால்!

சாதனைகள் புரியும் வயதிது உனக்கு
சாக்கடையைக் குடிக்கலாகுமோ?

மரணத்தின் பூட்டுதனை மது கொண்டு நெருங்குகிறாய்
பூட்டிற்கு சாவி மதுவென்று அறிந்திருந்தும்!
போதை மீறிப் போய்விட்டால்
பாதை மாறிப் போய்விடுமே!

உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்க
ஊசலாடிக்கொண்டு வருதல் உனக்குத் தகுமோ?
உன்னைச் சுற்றி ஒரு உலகிருக்க
உனக்குள் ஒரு உலகைத் தேடுகிறாய்!
உன் மக்களும் கெடுமே நாளை
உன்னைப் பார்த்து!

மூளைக்கு வேலை கொடு
மூலையில் அல்ல!

மதியை மயக்கும் மது வேண்டாம் நண்பா..

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (20-Apr-16, 8:30 am)
பார்வை : 1588

மேலே