எண்ணப் பூவும் வண்ணச் சரமும்

மனவெளியெங்கும்
வேரோடி விழுது விட்டு
கிளை பரப்பி உயரும்
நினைவெனும் விருட்சம்

கனவுச் சருகுகளிடை
காற்றென நுழைந்து
கடந்து போகும்
நிகழ்வின் கணங்கள்.

நித்தம் மலர்ந்து
நேர்த்தியாய்
வண்ணம் காட்டும்
எண்ணப் பூக்கள்.

உனக்கு மட்டும் புரியும்
மௌனப்படிமங்களில்
ஒவ்வொரு பூவாய்
சரம் கோர்க்கும் கரம்.

எழுதியவர் : சிவநாதன் (20-Apr-16, 12:53 am)
பார்வை : 75

மேலே