மண்னெங்கும் வீசும்

மண்னெங்கும் வீசும்...!

உன் -
நினைவுகளின்
நீளத்தைப் பொருத்தே...
என் -
கவிதை ஊஞ்சலின்
ஊசலாட்டம்...

என்னுள் மூழ்கும்
உன் கனவுகளின்
கனபரிமாணத்தையே...
என் மனம் -
கவிதையாய்
வெளியேற்றி
களிக்கிறது.

பிதாகரஸ் -
தேற்றத்தின்படி.....
காதல்,
வாழ்க்கை...
என்ற கர்ணத்தின்
மீது வரையப்பட்ட
சதுரத்தின் பரப்பளவாய்
நமது நட்பு நாளும்...

அன்பே
உன்னில்யென்
நினைவுகளை....
ஆலமரத்தின்
விழுதுகளாய்
அல்ல...
அதில் -
'ஆவின் 'செத்தையை
அனைத்து துயிலும்...
வைக்கோல் -
கத்தையாகவேணும்
வாழ விடலாகாதோ..?

தேசம் விட்டு
தேசம் தேடி...
இந்த -
வேடந்தாங்களுக்கு
விருந்தாய் வந்த
வேதப் பறவையே..!
நீ விட்டுச் சென்ற
எச்சங்களில்...
எழுந்த மரங்களில்
மலர்ந்த
மலர்களின் வாசம்...
இந்த -
மண்னெங்கும் வீசும்...

எழுதியவர் : காதல் (19-Apr-16, 10:48 pm)
பார்வை : 88

மேலே