பாடல் -முஹம்மத் ஸர்பான்

நெஞ்சோடு வாழ்ந்திடும் நினைவலைகள்
எத்தனை எத்தனை என் உயிரே...!
கண்ணோடு பேசிடும் பார்வைகள்
எத்தனை எத்தனை சொல் அன்பே!
முத்தத்தில் கவிதை படித்ததில்லை.
பிரிந்திட என்றும் நினைத்ததில்லை.
உன்னில் என்னை காண்பதனால்
மரணத்தை தாண்டி வாழ்ந்திடுவேன்.(பல்லவி)

மதியால் சதிகள் வந்ததம்மா
விதியால் காயம் தந்ததம்மா
நதியில் மீன்கள் அழுததம்மா
கதியில் கலங்கி தவித்தனம்மா
நினைவை கனவில் வாழ்ந்தோமே
உணர்வை நினைவில் சேர்த்தோமே
உன்னில் என்னை காண்பதனால்
மரணத்தை தாண்டி வாழ்ந்திடுவேன்(சரணம் 1)

காலத்தின் காயங்கள் ஆறிவிடும்
ஆறிய காயம் நினைவில் மறைவதில்லை
உதிரங்கள் சிந்தும் பூ நிலமே..!
வறியவன் நெஞ்சில் யாசகம் தருவாயா..
காதலின் ஆட்சி நிலவுலகில்
போகலாம் போகலாம் உணர்வலையில்
உன்னில் என்னை காண்பதனால்
மரணத்தை தாண்டி வாழ்ந்திடுவேன்(சரணம் 2)

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (21-Apr-16, 7:41 am)
பார்வை : 85

மேலே