காதல் என்பது - 2

காதல் காய்ச்சலில்
தவித்த அவர்களின்

காதல் அவஸ்த்தையை
நாமும் காண்போம்

ஒருவரை ஒருவர்
காக்க வைப்பது

காதல் வாழ்விற்க்கு
உகந்ததல்ல

ஒவ்வொரு நிமிட
தாமதத்திற்க்கும்

அங்கு கடும்
தண்டனை உண்டு

உண்மை வேண்டும்
நேர்மை வேண்டும்

இல்லையேல் காதல்
தோற்றுப் போகும்

அவளும் வந்து
காத்திருந்தாள்

அவன் வருகைக்காக
தவம் கிடந்தாள்

மற்ற ஜோடிகள்
மகழ்ச்சியில் திளைக்க

இவள் மட்டும்
இம்சையில் தவித்தாள்

அலைபாயும் மனதோ
இவளை பயமுறுத்தியது

நிச்சயம் வருவான்
என்று மனதிற்கு
தைரியம் சொன்னாள்

அவனும் வந்தான்
அவள் பார்வையை
தவிர்த்தான்

காரணம் சொன்னான்
கன்னத்தில் பரிசும்
தந்தான்

அவள் கோபம்
கொண்டாள்

அவனை தவிர்த்தாள்
வார்த்தை கக்கினாள்

அவனும் சற்று
மௌனம் காத்தான்

தவறை உணர்ந்தான்
தண்டனை ஏற்றான்

சமாதான கொடியை
அசைத்தான்

சகஜ நிலையை
கொண்டு வந்தான்

பின் அங்கு
நடந்ததென்னவோ
போராட்டம் தான்

இன்பப் போராட்டத்தில்
இருவரும்

தோற்று ஜெயித்தனர்
ஜெயித்து தோற்றனர்

காதல் என்பது
இம்சை தருவது

அதில் இன்பம்,
துன்பம் கலந்திருப்பது

இருபாலாருக்கும்
பொதுவானது

அவன் தூக்கம்
மறந்தான்

அவள் தூக்கம்
களைந்தாள்

அவன் ஒவ்வொரு
செயலிலும்

தவறுகள் செய்தான்

மற்றவர் சொல்கையில்
தன் நிலை உணர்ந்தான.

அவளும் இதற்க்கு
விதி விலக்கல்ல

இருந்தும் சற்று
சுதாரித்துக்கொண்டாள்

காதல் எனபது,

தன் நிலை மறதல்

எந்நேரமும் மனதை
இன்பமாய் வைத்தல்

சொல்லும் செயலும்
ஒத்தாதிருத்தல்

அனைவரிடமும்
திடீர் பாசம் வைத்தல்

பகைவனிடமும்
நட்பு பாராட்டுதல்

மற்றவரை சமாளிக்க
பொய்யை நாடுதல்

என்றும் இல்லா பழக்கமாய்
பக்திப் பெருக்கெடுத்தல்

தனக்கு பிடிக்காத
விஷயத்தில் அதீத
கவனம் செலுத்துதல்

(தொடரும்)

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (21-Apr-16, 11:50 am)
பார்வை : 194

மேலே