பிரிவின் நினைவுகள்

நீ பிரிந்த போது
உன் நினைவுகள்
எல்லாம் கனவாய்
வந்தன..
நீ சேர்ந்த போது
என் கனவுகள்
எல்லாம் நினைவாய்
வந்தன...

பள்ளி பருவங்கள்
எல்லாம் பாசத்தின்
சிகரங்கள்..
கல்லூரி காலங்கள்
எல்லாம் கற்பனையின்
அர்த்தங்கள்..

அறிமுகம் இல்லாமல்
அருகில் வந்து
தோழியாய்
அறிமுகம் ஆனாய்..

அருகில் இல்லாத போது
தொந்தரவு
தந்தாய்..என்
அருகில் இல்லாத போது
நினைவுக்குள்
வந்தாய்..

சோகத்தின் போது
தாயாக வந்தாய்
வேகத்தின் போது
நம்பிக்கை தந்தாய்...

நீ இல்லாத ஒவ்வொரு
நாளும் என் மனம்
ரணமாகிறது
உடலும் உயிரற்ற
கிடக்கிறது..

காலங்கள் எல்லாம்
கடக்கின்றன தோழியே..உன்
வருகை எதிர்பார்க்கின்றேன்..
நான் இறக்கும் முன்
என்னிடம் வந்து விடு
உன் புன்னகை
என்னுள் புதைத்து விடு...

எழுதியவர் : சபானா ஆஷிக் (9-Jun-16, 12:21 pm)
Tanglish : pirivin ninaivukal
பார்வை : 590

மேலே