வாழ்க்கை வரமாகும்

தொடர்ந்து
காயப்படுத்தும்
உறவுகளால்
வலியும் ரணமும்
தான் மிஞ்சும்.
அங்கே பாசம் ஏது
நேசம் ஏது?
அவை பேருக்கு தான்
உறவுகள்
அவர்களை கொண்டு
தேர் இழுக்கலாமே தவிர
உயிர்த்திறம்
மேம்படாது.
அவர்களை உறவுகள் என்று
சொல்லமுடியுமா?
உணர்ச்சியற்ற
நம்மிடையே
உலவிவரும்
வெத்து பதுமைகள்.
வலியாய்
இல்லாமல்
மருந்தாய்
உறவுகள்
கிடைத்தால்
வாழ்க்கை
வரமாகும்.

எழுதியவர் : சுபா சுந்தர் (9-Jun-16, 2:25 pm)
பார்வை : 565

மேலே