தினம் ஒரு பாட்டு இயற்கை - 14= 130

“சிறுதுளி சிறுதுளி மழையே – நீ
பெருதுளி ஆனால் அழகே…!
சாலையெங்கும் நீரோடை – நீ
சலங்கை கட்டாத ராதை…!”

(சிறுதுளி)

ஐப்பசி கார்த்திகை மாதம்
பூமி தாயின் பசியை தீர்க்கும்
மா மழையே நீ வாழ்க..!
மண் னுயிர்கள் மனம் குளிர…!

தேவ தூதர்கள் தெளிக்கும்
தீர்த்த வாரியா நீங்கள்..?
தேவ கன்னிகள் போல
கை கோர்த்து வருகிறீர்கள்..!

(சிறுதுளி)

மே ஜீன் மாதம்
அக்னி கரங்கள் பூமியில் இறங்கும்
வெப்பச் சலனம் உருவாகி
கத்திரி வெயிளை அரவணைக்கும்..

விண்ணின் மேக கண்ணன்
உன்னை அனுப்பி வைத்து
மண்ணின் வெப்பம் தணிக்கிறான்
அன்னை பூமி உன்னை குடிக்கிறாள்

(சிறுதுளி)

இருகரத்தால் உன்னை
மாறி மாறி தட்டி
விளையாடும் அழகே தனிதான்
புனித மழையே நீ சுகம்தான்..!

கால நேரம் கிடையாது
உன் வருகையின் பதிவேடு
உலகின் ஒவ்வொரு பகுதிக்கும்
தனி தனி கணக்கீடூ..!

(சிறுதுளி)

நீ பொழியாத காலம்
பூமியின் போராத காலம்
விவாசாய நாடுகளில்
பஞ்சம் தலைவிரித்தாடும்

ஏற்றுமதி இறக்குமதி
வியபார சந்தைகள்
விலைவாசி ஏற்றத்தால்
கல்லச் சந்தையால் தடுமாறும்.

(சிறுதுளி)

எழுதியவர் : சாய்மாறன் (9-Jun-16, 4:12 pm)
பார்வை : 120

மேலே