டிவி

பாரு பாரு நல்லாப் பாரு
டிவியில படத்தைப் பாரு
தீங்குவரும் எண்ணிப் பாரு
கண்ணை நீயும் காக்கப் பாரு.

இருந்துகிட்டு டிவி பாரு
இடைவெளியைக் கூட்டிப் பாரு
இதமோடு இருக்கும் பாரு
இனிமை இனி வரும் பாரு.

நல்லசெய்தி நாளும் பாரு
நாட்டு நடப்பு புரியப் பாரு
வீட்டு வேலை சேர்த்துப் பாரு
வீங்கிடாமல் கண்ணைப் பாரு.

அறிவுத் திறனை வளர்க்கப் பாரு
அன்னை தந்தை மகிழப் பாரு
அன்புக் கொண்டு பழகப் பாரு
அகிலம் உன்னை போற்றப் பாரு.
**************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (9-Jun-16, 8:17 pm)
Tanglish : tv
பார்வை : 77

மேலே