பச்சைக் கிளி
பச்சைக் கிளிதான் பறக்குது
பார்வைக் கழகாய் இருக்குது
பாடிப் பாடிப் பறக்குது
பக்கம் வந்து பழகுது.
பழத்தைக் கொடுத்தால் தின்னுது
பாலைக் கொடுத்தால் குடிக்குது
சொல்லித் தந்தால் பேசுது
சுவையாய் அதுவும் இருக்குது.
கூண்டில் கிளியை அடைக்காதே
கொடுமை அதற்குச் செய்யாதே
வண்ணச் சிறகை வெட்டாதே
வருந்த அதனை வைக்காதே.
தீண்டும் இன்பம் கொண்டுவிடு
தீங்கு செய்ய மறந்துவிடு
வேண்டும் மட்டும் பழகிவிடு
வேதனை மறையும் புரிந்துவிடு.