திருமணம் மற்றும் திருமண வாழ்த்துக் கவிதைகள் பக்கம் 04 --முஹம்மத் ஸர்பான்

மனமே மனமே இணைந்து விட்டாய்
இரவாய் பகலாய் உறைந்து விட்டாய்
காதலும் அன்பும் வேராய் போனது
சுமைகள் வந்தால் தோளில் தோளாய்
என்றும் ஆதாரமாய் வாழ்ந்திட வேண்டும்

காற்றில் பறக்கும் சருகை போல
மூச்சுக் காற்றின் பரிமாற்றத்தில் சுவாசித்து
சந்தேகம் எனும் நஞ்சை தூசித்து
கல்லறை செல்லும் வரை நேசித்து
புரிந்து வாழ்வதில் தான் சுமையும் இனித்திடும்

மெளனங்களாலும் வார்த்தைகள்
மொழிபெயர்ப்பாகி வாழ்வின் பக்கத்தில்
அவைகள் கவிதையாகி ஆனந்தம் வாழ்ந்திட
இரு உயிர்களின் புரிதலில் தான் விடையுண்டு

பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட
வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால்
உன் இலக்கும் அவள் பயணமும் ஒன்றாகும்
ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான்
வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது

பாழடைந்த வீட்டை காக்கும் சிலந்தி போல
வாழ்க்கை எனும் வைக்கோலால்
அன்பு எனும் ஆழமான கூட்டை கட்டி
அதில் மழலைகள் மொழிகள் ஒலித்து
கண்களில் கண்ணீர் விதையாக விளைநிலம் வேண்டும்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (10-Jun-16, 5:14 am)
பார்வை : 1003

மேலே