வலஞ்சுழி முத்தம் - வினோதன்

வா
வந்து
வலஞ்சுழி
முத்தம் தா !

தா
தந்து
எனக்காய்
சுவாசித்துப் போ !

போ
போய்
கிறுக்கு
இதயத்தில் பா !

பா
பாவில்
காமம் தாண்டிய
காதல் மோ !

மோ
முகர்ந்து
அணி மகிழ்வுற
மனதில் நூ !

நூ
நூத்து
கலவாமல் கலந்து
நம்மை ஞா !

ஞா
இரண்டற
சாவி தொலைந்து
தூரம் போ !

பூ
பூத்து
சொர்க்கம் தேடி
மீண்டும் வா !

எழுதியவர் : வினோதன் (24-Oct-15, 4:06 pm)
பார்வை : 133

மேலே