தொடும் வானம்   தொடுகின்ற தூரம் தான்

தொடும் வானம்
  தொடுகின்ற தூரம் தான்
ஆம்
தொடும் வானம்
  தொடுகின்ற தூரம் தான்
தன் நம்பிக்கையும்
  தன் உழைப்பில் நம்பிக்கையும்
வெற்றியின் உச்சத்தை
   எட்டி விட போதுமே
உச்சத்தை தொட
    அச்சம் தடைகல்லானால்
துச்சமென எண்ணி
     அதை மைல்கல்லாக்கு
சமுத்திரமும் உன் கையில்
   உலகே உன் விரல்நுனியில்
நிலாவிலும் உலாவரலாம்
     விண்மீனுக்கும் தூண்டில் போடலாம்
முயற்சிகள் தான் தேவை
     முயற்சித்து பார்....

எழுதியவர் : புவனேஸ்வரி (11-Oct-21, 5:28 pm)
சேர்த்தது : புவி
பார்வை : 1182

மேலே