மகள்
மகள்
மன மகிழ மனையில் மனதில் பூக்கும் மலரை!
மங்கலம் தரும் வாழ்வின்
மறுமலர்ச்சி தரும் உணர்வே!
மனிமனியாய் பேசும் மொழி
மகிழ்ச்சியாய் மனம் குளிர
மனக் கலக்கம் கறைந்திட
மதுவின் திவிட்டதா
சுவையல்லவா நீ!
மணிக் கணக்காய் கதை சொல்லும் கனிமொழி நீ!
மனதில் படரும் மழலையின் செம்மொழியல்லவா! மானிட பிறவியில் மறுமலர்ச்சி தரும்
மகளே என் தாயல்லவா நீ!
மலர் போல் நடமாடும் இல்லறத்தின் தேவதை நீயல்லவா நீ !
இல்லத்தில் தெய்வீக மலரின்
பெண்மையின் செம்மலர் நீயல்லவா!
சிலம்பின் அசைவில் இல்லத்தின் இசைமகள் நீயல்லவா!
மனமிட்டு பேசும் மொழி
தாயின் பொருள்ளாவா நீ
மகளே! மகளே! அதிகாரம்
வார்த்தைக்கு கட்டுபடுவேன்
மகளின் கலக்க மில்லா அன்பு
இல்லறத்தின் கண்ணில் காணும் இறைவன் அல்லவா!
மகளின் அக்கறையையும் கவனிப்பையும் நீ
தந்து மாபெரும் செங்கனியல்லவா!
முதல் அன்பைப் பொழியும் மகளின் அன்பு
அப்பா ஞானத்தில் அவள் ஒரு புது உலகமே!
தைரியமிக்கபெண்ணாக உருவாக்கச் சாதனை படைக்க அப்பாவின் மகளே!
உன் கட்டளை ஞானம் விவேகம் செவிசாய்த்துச் சொன்ன தாய் நீயால்லவா!
வெள்ளியைப் போல் தேடுகின்ற இல்லத்தின் தேவதை நீயல்லவா !
அப்பாவின் என்றும் தேவதை நீ
வையகத்தின் உறவுகள் விட அப்பா மகள் உறவு அதிகம்!
நான் தாயாகப் பார்க்கும் உறவு என் மகளல்லவாநீ!
அப்பவின் இறுதி பயணம் வரை உறவு என் மகளே!