இடையில் நான்
தாய்க்கும் தந்தைக்கும்
இடையில் நான் மகனாக
பிறப்புக்கும் இறப்பிர்க்கும்
இடையில் நான் வாழ்க்கையாக
ஆசிரியருக்கு மாணவருக்கும்
இடையில் நான் புத்தகமாக
அன்புக்கும் ஆசைக்கும்
இடையில் நான் பயமாக
இதயத்திற்கும் இரத்தத்திற்க்கும்
இடையில் நான் துடிப்பாக
இரவுக்கும் பகலுக்கும்
இடையில் நான் விடியலாக
ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையில் நான் சிவசக்தியாக
இடையில் வந்த நான்
இலை உதிர் காலமாக "மறைகிறேன்"