ஓடை நீர்
![](https://eluthu.com/images/loading.gif)
ஓடை நிறைந்து வாய்க்கால்
தழுவும் நீரைக் கண்டேன். /
ஓசை எழுப்பிய வண்ணம்
மலையேறி துள்ளுவதைக் கண்டேன்./
தடைகள் போட்டு மறைக்க
முடியாதவை நீர் என்றேன். /
தடையமே இல்லாது அழிவை நோக்கும் விவசாயத்தை எண்ணி நின்றேன்/
இரவு தூக்கத்திலும் மனத்தாக்கம் உணர்ந்தேன். /
இதயமது அதிகமாகவே
வலிக்கக் கண்டேன்./
தானம் கொடுக்கும் நதியை
கனவில் மட்டும் கண்டேன் ./
தாகம் தீர்க்க காத்திருந்த பூமி வறண்டு இருப்பதையும் நோக்குகின்றேன். /
வேதமும் வேற்றுமையும்
விவசாயத்தில் இல்லை என்றேன்./ வேதனையான செயல் நீர்
மறுப்பு என்று கூறி நின்றேன். /
நதியாகும் மழை நீருக்கு
தடை போட்டவன் மனிதன் தான்./
நட்ட மரங்களை எல்லாம்
வெட்டிய பாவியும் நாம் தான். /
வானம் பார்த்த பசுமையை
இழந்தோம் என்றேன். /
வறட்சி காணும் வண்ணம் நிலத்துக்குக் கொடுமை புரிந்தோரும் நாமே தான் என்றேன். /
விவாதம் பண்ணுகின்றான்
என்னோடு புரியாத ஒருவன். /
விபரம் அறிந்தவன் ஏற்றுக் கொண்டான்./ 😊