ரங்கநாதன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரங்கநாதன் |
இடம் | : நரியனுர் |
பிறந்த தேதி | : 23-Dec-1951 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 147 |
புள்ளி | : 57 |
கவிஞர், வழக்கறிஞர்,
மேடை பேச்சாளர்
அந்தி நெருங்கயிலே
அடுக்கு மல்லி பூக்கயிலே
அஞ்சாத வயசுக்காளை
அஞ்சி என் அருக வந்தான்
அஞ்சி அருக வந்து
அத்தனை வாசமின்னான்
ஊரோரம் பாறையிலே
ஊத்து தண்ணி ஓசையிலே
ஒட்டாத உறவுக்காரி
ஒட்டி என் அருக வந்தாள்
ஒட்டி அருக வந்து - எனக்கு
உதிரிப்பூ தோசமின்னாள்
குளத்தங்கரை ஓரத்திலே
கோவில் மணி ஓசையிலே
முத்தாத மீசைக்காரன்
மூச்சடக்கி தவமிருந்தான்
மூச்சடக்கி தவமிருந்து - இது
முப்பிறப்பு பந்தமின்னான்
நட்ட நடு சாமத்திலே
வட்ட நிலா காய்ச்சலிலே
கட்டான உடலழகி - என்
கிட்ட நின்னு தலை கவிழ்ந்தாள்
கிட்ட நின்னு தலை கவிழ்ந்து - எனக்கு
பொட்டு வச்சா தோசமின்னாள்
வெள்ளி முளைக்கயிலே
வெள்ளரளி பூக்கயிலே
சேராத இளஞ்சோடி
சேர்ந்து
பராரியாய்த் திரிந்து பகற்பொழுதைப் பாழாக்கி அந்தி நெருங்க நெருங்க அவசர அவசரமாய் மேயும் ஆடு மாடு போலத்தான் நானும் மைத்துனிக்கு பிறந்தநாள் மனைவியின் முப்பாட்டன் நினைவுநாள் இளமைக்காலம் இப்படித்தான் விரையம் ஆரத்தழுவியது அந்திமம் என்னை ஆழ்மனப் பதிவுதனை அச்சேற்றி நூலாக்க மும்முரமாய் முயற்சிக்கிறேன் நகையாடி களிக்கிறது நட்புவட்டம் மனநல மருத்துவம் மந்திரத்தாயத்து உசிதமாம் மனைவி தரப்பு வாதம் ஆத்திரம் தாளாமல் ஆழ்ந்தேன் நித்திரையில் ஆவி (...)
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
வானில் பெருகி வந்ததடி இன்று வைகைநதி
வானளாவும் கோபுர மதுரை நகரின் வீதியிலே
தேனிதழில் செந்தமிழ் ஏந்திநீ அசைந்து நடக்கையில்
நானெழுதி கவிஞனாக சற்றுதிரும்பிப் பாரடி மீன்விழியே
----ஒரே அடி எதுகையும் ஐஞ்சீரும் அமைந்த கலித்துறை
எதுகை னகர வர்க்கத்தால் அமைக்கப் பட்டிருக்கிறது
வானில் பெருகி வருகுதுபார் வைகைநதி
வானளாவும் கோபுரத் தென்மதுரை வீதியிலே
தேனிதழில் செந்தமிழ் ஏந்தி நடக்கையில்
நானெழுத சற்றுநின்று செல்
-------- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா-
***உன் கோபம் என்று குறையுமோ 555 ***
என் சகியே...
நீயும் நானும் காதலை சொல்லி
நாம் சந்தித்த முதல் சந்திப்பு...
நினைவிருக்கா
அந்த அழகியநாள்...
சேர்ந்து நடக்கையில் என்னை
உரசி பார்க்கும் உன் துப்பட்டா...
வானில் பறந்தேன்
அப்போதெல்லாம் என்னை மறந்து...
எவ்வளவு கோபம்
உன்மீது கொண்டாலும்...
என்னை களவாடிய உன்
கண்களை பார்க்கும் போது...
கோபவார்த்தைகள்கூட
சிரிப்பாக மாறுதடி...
நான்
சிரிக்கும் போதெல்லாம்...
அதிகமாக அழகாக கோபம்
கொள்கிறாய் என்மீது...
முதல் சந்திப்பில் நான்
எதிர்பார்க்காத நேரம்...
நீ கொடுத்த
அந்த முதல் முத்தம்...
என் கன்னத்தில்
இன்னும் கூசுதடி...
மேகங்கள்
கலிவிருத்தம்
கலிப்பா. மூன்றசை தாண்டிட தப்பது
கலிப்பா வன்றென அறிந்திடு பாவல
சொலிக்க நீபுனை மோனையும் பொழிப்பாய்
ஒலிக்கும் பாட்டது ஊரையும் ஈர்க்குமே
அடிதோரும் கலி, சொலி,. ஒலி , என்பதில் லி ஏதுகையை கவனியுங்கள்
புளிமா கூவிளம். கூவிளம். கூவிளம்
என்ற அமைப்பில் கலிவிருத்தம் அமை துள்ளது எல்லாமே
ஈரசை சீரால் அமைந்துள்ளதை காணுங்கள்
கலிவிருத்தம் கற்றுக்கொள்வோர் முக்கியமாக அறிய வேண்டியது
1. கலிப்பாவில் இரண்டசை மாச்சீர் மூன்றசை கொண்ட காய்ச்சீர் தாண்டி
நாலசை சீர்கள் வருதல் கூடாது என்பது விதி.
2. அடிதோரும் எதுகையிருப்பினும் கலிப்பா வாகுமோ. மூன்றாம் சிரில்
பொழிப்பு மோன
பராரியாய்த் திரிந்து
பகற்பொழுதைப் பாழாக்கி
அந்தி நெருங்க நெருங்க
அவசர அவசரமாய் மேயும்
ஆடு மாடு போலத்தான் நானும்
மைத்துனிக்கு பிறந்தநாள்
மனைவியின் முப்பாட்டன் நினைவுநாள்
இளமைக்காலம் இப்படித்தான் விரையம்
ஆரத்தழுவியது அந்திமம் என்னை
ஆழ்மனப் பதிவுதனை அச்சேற்றி நூலாக்க
மும்முரமாய் முயற்சிக்கிறேன்
நகையாடி களிக்கிறது நட்புவட்டம்
மனநல மருத்துவம் மந்திரத்தாயத்து உசிதமாம்
மனைவி தரப்பு வாதம்
ஆத்திரம் தாளாமல் ஆழ்ந்தேன் நித்திரையில்
ஆவியைப் பிழிந்தெடுத்து
இல்லாத ஊருக்கு
இடைநில்லாப் பயணமிது
மூச்சிரைக்க ஓடினாலும் –முடிவில்
தொடக்கப் புள்ளியைத் தொட்டு முடிகிறது பாதை
கூட்டுப்பாதைச் சந்திப்பில்
கூட்டத்திற்குப் பஞ்சமில்லை
பொய்தேதியிட்ட பிறந்தநாளின்
தானதர்ம முகாம்கள் அங்கு வாடிக்கை- அதில்
தள்ளுமுள்ளுத் தடியடிப் பிரயோகம் பிரசித்தம்
குரைப்பதும் ஓர் உழைப்பு
துரத்துவது மாவீரம்
ஓடுவதும் ஒரு உபாயமே –எனும்
போக்கற்ற நாய்களின் புகலிடமும் அதுவே.
வண்ண வண்ணச்சுவரொட்டியை
வசமாய் உடுத்திக் கொண்டு எக்குத்தப்பாய் நிற்கிறது
இடுப்பொடிந்த பெயர்ப்பலகை
தோப்பாகி மிளிர்கிறது –தானைத்தலைவர்கள்
தகவமைத்த கொடிமரங்கள்
முகச்சவரம் கண்டு
முக்கூட்டு எண்ணை தேய்த்துக்குளிப்பாட்டி
மொ
காட்டாற்று மடுவு தனில்
அல்லாடுஞ் சிறு கல்லானேன்
குருவியணில் ஓணானைக்
குறிவைத்து எறிகிறார்கள்
சிதைந்துச் சீரழிந்த என்
கதையறியாச் சிறுவர்கள்
மிதித்துத் துவைக்கிறது
மாடாடெருமைகளும்
எடுத்துத் துடைக்கிறது
மலங்கழிக்க வந்த சனம்
ஈயெறும்புக் கொசுகளிங்கே
இராப்பகலாய் மாநாடு
சேதி தெரியுமா
மின்னல் இடி புயல் என்னை
மோதி மடிந்ததுண்டு
இரையெடுத்த மலைப்பாம்பு - என்
இடுக்கடியில் அயர்ந்திருக்க
வேங்கை புலி சிங்கம் எல்லாம்
வந்தமர்ந்து வெயில் காயும்
முகில் கூட்டம் என்னெதிரே
ஒயிலாட்டம் போட்டதுண்டு
அம்புலிகள் வடமிழுக்கும்
என் மேனியிலே
அழகு நிலாத் தேர் நடக்கும்
சொன்னால் நம்புகள்
வனத்தைத்
வேசிக்கும் வேலையுண்டு
வெளியார் கண்ணுக்கு
பழைய சோறு யாசிக்கும்
குருடனுக்கும் ஓடு உண்டு
கோல்இருக்கும் , கோணிப் பை இருக்கும்
குப்பை பொறுக்கிக்கும்
இவனோ வெறும் பயல்
துண்டு பீடியில் தேய்ந்த காதன்
புறந்திண்ணை பகல் உறக்கம்
நீட்டிப் படுத்தால்
நெற்றியில் ஓட்ட நாலணா பஞ்சம்
பெயரை எழுத பேனா முறியும்
பேப்பரும் கிழியும்
பேருந்தின் ஊரைப் படிக்க
பொழுதே விடியும்
காலம் சென்றது
கட்டிடம் வந்தது
வாசலில் கார் நின்றது
வெள்ளித் தட்டிலே பிள்ளைகள் தின்றது
மம்மியுடன் டாடியாய் மாறிப் போனான்
தும்பை பூச் சொக்காய்
தோள் முழுக்கத் துண்டு
நாவிதக் குப்பையில் நரை மீசை கிடந்தது
ஓருயிரு மாயும் போது
ஈருடலும் சாயுமின்னு
கண்ணும் கண்ணும் பேசும் போது சொன்னாளே - இன்று
கண்டவர்க்கு கழுத்தை நீட்டி நின்னாளே
பல்லழகு சொல்லழகு
பாங்கான நடையழகு - என்னை
மெட்டு கட்டி பாட்டெழுத சொன்னாளே
மெட்டியிட்டு வேறொருத்தன் பத்தியமாய் நின்னாளே
ஊரறிய உறவறிய
உன்வீடு விளக்கெரியும் - மாலையிட்டு
ஊர்வலமாய் போவமின்னு சொன்னாளே - கோலமிட்டு வேறொருத்தன் வாசலிலே நின்னாளே
பாலோடு பழமிருக்கும்
பள்ளியறை பூ மணக்கும்
காலம் வரும் காத்திருன்னு சொன்னாளே - என்னை
கலங்க விட்டு காத தூரம் போனாளே
தவமாய் தவமிருந்தேன் - என்
தாயோட முகம் மறந்தேன்
தேவதையாய் மனசுக்குள்ளே வந்தாளே - எனக்கு