எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பராரியாய்த் திரிந்து பகற்பொழுதைப் பாழாக்கி அந்தி நெருங்க நெருங்க...

    பராரியாய்த் திரிந்து பகற்பொழுதைப் பாழாக்கி அந்தி நெருங்க நெருங்க அவசர அவசரமாய் மேயும் ஆடு மாடு போலத்தான் நானும்   மைத்துனிக்கு பிறந்தநாள் மனைவியின் முப்பாட்டன் நினைவுநாள் இளமைக்காலம் இப்படித்தான் விரையம்   ஆரத்தழுவியது அந்திமம் என்னை ஆழ்மனப் பதிவுதனை அச்சேற்றி நூலாக்க மும்முரமாய் முயற்சிக்கிறேன் நகையாடி களிக்கிறது நட்புவட்டம் மனநல மருத்துவம் மந்திரத்தாயத்து உசிதமாம் மனைவி தரப்பு வாதம் ஆத்திரம் தாளாமல் ஆழ்ந்தேன் நித்திரையில்   ஆவியைப் பிழிந்தெடுத்து காவியம் வடிவமைத்தேன் ஆசி அணிந்துரைதான் வேண்டினேன் மாறுவேடம் மாற்றுப் பெயரிட்டு-அதை மறுமணமே புரிந்துவிட்டார் கலைஇலக்கிய நாட்டாமை   ஈருயிரை ஓருயிராக்கி பிளந்து பாதி உயிரோடு –எனைப் பிரிந்தவளை பாடிவைத்தேன் காதல் காணிக்கையும் களவுபோனது காதலோடு   விழித்தேன் வடிந்த வீழ்நீரைத் துடைத்தேன் மருத்துவம் தாயத்து ஏற்றேன் மறுப்பேதுமின்றி   -நரியனூர் ரங்கநாதன்                                       செல்: 94420 90468

பதிவு : ரங்கநாதன்
நாள் : 11-Jul-22, 4:18 pm

மேலே