எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிலவற்றை ப்ரேக் பண்ணமுடியாத நினைவுகளாக ப்ரபஞ்சம் பரிசளித்துவிட்டுப் போய்விடுகிறது...

சிலவற்றை ப்ரேக் பண்ணமுடியாத நினைவுகளாக ப்ரபஞ்சம் பரிசளித்துவிட்டுப்
போய்விடுகிறது ..என் பிறந்தநாள் கடிதங்கள்.. தனிமையின்போது வெட்கம், காதலின்போது மழை, இரசனையின்போது சிரிப்பு, இரவின்போது காற்று, நிலவின் நீண்ட ஆகாயம், நேற்றிரவு மகள் நட்சத்திரங்களை காணோம் என ப்ராது சொல்லிக் கொண்டிருந்தாள்,
முழு நிலவுநாளில் நட்சத்திரங்கள் இல்லாததை இதுநாள்வரை
என் கவிதைகள் அறிந்திருக்கவில்லைதான்.
நீண்ட சாலை,,சன்னமான இரைச்சல்கள்.. இப்படியாக இன்னும் எத்தனையோ.... நினைவின் அலமாரியிலிருந்து அடுக்குகளாக நூறு நூறுப் பூக்கள்
பூத்தவண்ணமே இருக்கின்றன..

நாள் : 9-Jul-22, 12:38 pm

மேலே