குயிலோசை
அந்தி நெருங்கயிலே
அடுக்கு மல்லி பூக்கயிலே
அஞ்சாத வயசுக்காளை
அஞ்சி என் அருக வந்தான்
அஞ்சி அருக வந்து
அத்தனை வாசமின்னான்
ஊரோரம் பாறையிலே
ஊத்து தண்ணி ஓசையிலே
ஒட்டாத உறவுக்காரி
ஒட்டி என் அருக வந்தாள்
ஒட்டி அருக வந்து - எனக்கு
உதிரிப்பூ தோசமின்னாள்
குளத்தங்கரை ஓரத்திலே
கோவில் மணி ஓசையிலே
முத்தாத மீசைக்காரன்
மூச்சடக்கி தவமிருந்தான்
மூச்சடக்கி தவமிருந்து - இது
முப்பிறப்பு பந்தமின்னான்
நட்ட நடு சாமத்திலே
வட்ட நிலா காய்ச்சலிலே
கட்டான உடலழகி - என்
கிட்ட நின்னு தலை கவிழ்ந்தாள்
கிட்ட நின்னு தலை கவிழ்ந்து - எனக்கு
பொட்டு வச்சா தோசமின்னாள்
வெள்ளி முளைக்கயிலே
வெள்ளரளி பூக்கயிலே
சேராத இளஞ்சோடி
சேர்ந்து மிதக்குதங்கே
செங்கரட்டு ஓடையிலே
குயிலோசை கரையுதங்கே
குள்ளநரி ஊளையிலே -நரியனூர் C.ரங்கநாதன்
94420 90468