காதல் 2 💕❤️

காதல் வந்த பின் கடிதம் இல்லை

உன் நினைவுக்கு பஞ்சம் இல்லை

தொலை தூரத்தில் நீ வருவது

என் இதயம் உணர்வது

பூவின் வாசம் காற்றில் மிதப்பது

உன் அழகை கண்டு வியந்து

கதிரவன் மறைவது

நீ என் பக்கம் வருவது

நான் வார்த்தையை மறப்பது

இதயம் ரசிப்பது

காதல்

எழுதியவர் : தாரா (2-Feb-23, 1:53 am)
சேர்த்தது : Thara
பார்வை : 229

மேலே