நானெழுதி கவிஞனாக சற்றுதிரும்பிப் பாரடி மீன்விழியே
வானில் பெருகி வந்ததடி இன்று வைகைநதி
வானளாவும் கோபுர மதுரை நகரின் வீதியிலே
தேனிதழில் செந்தமிழ் ஏந்திநீ அசைந்து நடக்கையில்
நானெழுதி கவிஞனாக சற்றுதிரும்பிப் பாரடி மீன்விழியே
----ஒரே அடி எதுகையும் ஐஞ்சீரும் அமைந்த கலித்துறை
எதுகை னகர வர்க்கத்தால் அமைக்கப் பட்டிருக்கிறது
வானில் பெருகி வருகுதுபார் வைகைநதி
வானளாவும் கோபுரத் தென்மதுரை வீதியிலே
தேனிதழில் செந்தமிழ் ஏந்தி நடக்கையில்
நானெழுத சற்றுநின்று செல்
-------- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா-